அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலிஜியம் இது தொடர்பான பரிந்துரைகளை நேற்று மாலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதன்படி, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அருண் பன்சாலியை நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை […]
ஹத்ராஸ் வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் எனும் கிராமத்தில் 19 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையாக கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி சந்திர பால் சிங் மற்றும் […]
அமெரிக்க அப்பீல் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழரான ஸ்ரீ. சீனிவாசன் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்க அப்பீல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவில் சுபரீம் கோர்ட் உள்ளது. இதற்கு அடுத்த நிலையில் கொலம்பியா சர்கியூட் அப்பீல் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழரான ஸ்ரீ. சீனிவாசன் (52) என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரது தந்தை […]
நாடு முழுவதும் வன்முறை நிறுத்தினால் மட்டுமே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியுள்ளார். நீதிமன்ற நடவடிக்கை அமைதியைக் கொண்டு வருவதற்காக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமல்படுத்தியது முதல் இந்தியா முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக எதிர்க் கட்சிகளும் தீவிர போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் பல்வேறு கல்லூரி மாணவர்களும் இந்த சட்டத்திற்கு […]
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றதில் தலைமை நீதிபதியாக இருந்தால் தஹில் ரமணி மேகாலயாவில் உள்ள தலைமை நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. அவர் பதவியை ராஜினாமா செய்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது. இதனால் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமைப் பொறுப்பு நீதிபதியாக வினித் கோத்தாரி உள்ளார். இதைத்தொடர்ந்து பாட்னா உயர் நீதிமன்றத்தின் […]