தேர்தலில் தோற்கும் அரசியல்வாதிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பலிகாடாவாக்க முயற்சிப்பதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் வணிகத்துறைச் சார்ந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என தெரிவித்தார். மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிய அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது அரசியல்வாதிகள் கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்றார். அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் கடந்த […]