சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பவர்களை கண்காணிக்க இந்து அறநிலையத்துறை கண்காணிப்பு குழுவை நியமித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில், பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா காலகட்டத்தில் 2 வருடங்களாக மட்டும் அந்த கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யும் வழக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னரும் இந்த தடை அங்குள்ள தீட்சிதர்களால் தொடர்ந்ததால், இந்த பிரச்னை உயர்நீதிமன்றம் வரை சென்றது. […]