கடுமையான வெப்பம் எதிரொலி காரணமாக நாமக்கலில் கடந்த 2 வாரங்களில் சுமார் 15 லட்சம் பண்ணைக் கோழிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடை வெயிலானது ஆரம்பமாகியுள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கிறது.இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில்,ஏப்ரல் மாத ஆரம்பத்திலிருந்தே 105 டிகிரிக்கும் மேல் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.வெப்பத்தினை தாக்குப் பிடிக்க முடியாமல் நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையில் உள்ள கோழிகள் அதிகளவில் இறந்து வருகின்றன. இது குறித்து பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில்,கடந்த 2 வாரங்களில் மட்டும் […]