இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து வரவழைக்கப் படுவதாக மத்தியபிரதேச தலைமை வனப்பாதுகாவலர் ஜே.எஸ்.சௌஹான் தெரிவித்தார். மேலும் அவை வெறும் வயிற்றில் பயணிக்கும் என்றும் அவர் கூறினார். நீண்ட தூர பயணம் விலங்குகளுக்கு குமட்டல் போன்ற சிக்கல்களை உண்டாக்கும் என்பதால் அத்தகைய முன்னெச்சரிக்கை தேவைப்படுவதாகவும் சௌஹான் தெரிவித்தார். இந்த சிறுத்தைகள் செப்டம்பர் 17 ஆம் தேதி மத்தியபிரதேசத்திலுள்ள குனோ-பால்பூரில் உள்ள தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்படும். சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் […]