சத்தீஸ்கர் அரசு சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக, சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பஹால் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல மாநிலங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், தடுப்பூசி போட்டபின் வழங்கப்படும் சான்றிதழில் […]