Tag: chethuraamaan

நடிகர் சேதுராமனின் உடலை கண்ணீருடன் சுமந்து சென்ற சந்தானம்!

பிரபல நடிகரும், மருத்துவருமான சேதுராமன் தமிழ் சினிமாவில், கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்நிலையில், இவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவரது மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சந்தானம், சேதுராமனின் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், இறுதியாக அவரது உடலையும் கண்ணீருடன் சுமந்து சென்றுள்ளார். 

#Death 2 Min Read
Default Image