14 வயதுக்குட்பட்டோரின் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 13 வயது ஏ.ஆர்.இளம்பரிதி தங்கம் வென்றார். ருமேனியா நாட்டிலுள்ள மாமியாவில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இளம்பரிதி, ருமேனியா வின் பிலிப் மாகோல்ட்டை வீழ்த்தி சாம்பியன் ஆனார். தனது 34 ஆவது நகர்வில் இளம்பரிதி இந்த வெற்றியைப் பெற்றார். மொத்தம் 11 சுற்றுகளில் […]