சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடந்து வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தாவில் நடந்து முடிந்தது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி […]
சென்னை : இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. முதல் டி20 போட்டியில் 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியை, இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று […]
சென்னை : இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணி அளவில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்திற்கு எதிரான 2வது மற்றும் 3வது டி20 போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியின் போது ஃபீல்டிங் செய்யும்போது ஏற்பட்ட வலி காரணமாக, 2வது போட்டியில் ரிங்கு சிங்குக்கு மாற்றாக ரமன்தீப் சிங் […]
CskvsRCB 17ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது.முதல் போட்டி என்பதால் இந்த போட்டியில் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் […]
சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எந்த போட்டியும் இல்லை. இந்தியன் பிரீமியர் லீக் 2021 இன் அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் சற்று நேரத்திற்கு முன் அறிவித்தது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல் போட்டி அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு […]
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே என்ற மூன்று கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கட்டியது. இந்த மூன்று கேலரிகளிலும் 12 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கேலரிகளை கட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அரசிடம் முறையான அனுமதி பெற வில்லை என்றும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது என கூறி சென்னை மாநகராட்சி 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது. […]
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம் இந்த ஸ்டேடியத்தில் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வருகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக ரூபா குருநாத், செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி பதவியேற்றனர். திறக்கப்படாமல் இருக்கும் 3 கேலரிகள் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிடம் தெரிவித்திருந்தனர். இந்தியாவின் பழமையான மைதானங்களில் ஒன்று தான் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம். மாநில அரசுக்கு சொந்தமான இந்த ஸ்டேடியத்தில் […]
நம்ம தல தோனியை காண முடியாமல் ரசிகர்கள் தவித்தனர். ரசிகர்கள், அரங்கமே அதிரும் அளவிற்கு “தோனி.. தோனி” என கரகோஷமிட துவங்கினர். இதனை எந்த ஒரு ஆர்பரிப்பும் இல்லாமல் தனக்கே உரிய அமைதியான பாணியில் ரசித்தார் தோனி. ஆஸ்திரேலியா அணியுடனான தொடரை முடித்துவிட்டு நேராக சென்னை அணிக்காக பயிற்சியில் இறங்க வந்துவிட்டார். கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் ஆடவில்லை. இரு தினங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வந்த தோனியை காண பயிற்சி ஆட்டத்திக்கே பல ரசிகர்கள் குவிந்தனர். […]