முரசொலி அலுவலக இடம் வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு. முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ளதாக எல் முருகன் கருத்து தொடர்பான வழக்கில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் ஏப்ரல் 22-ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்தபோது வேலூரில் நடந்த பொதுக்கூட்டம் […]
புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் மனு தள்ளுபடி. பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் செப்டம்பர் 14ம் தேதி ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஓ.பி.எஸ் மற்றும் […]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராடிய வழக்கில் இருந்து முதலமைச்சர் உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 தலைவர்களை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தியாக முக ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குகளை […]