சென்னையில் வரும் 3-ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக அறிவிப்பு. சென்னையில் வரும் 3-ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு முழு வேலை நாள் என சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தொடர் மழையால் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பாட வேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இதில், வரும் […]
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு. சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு, மேயர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவரான 44-ஆவது வார்டு கவுன்சிலர் சர்பஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக ஏற்கனவே சோதனை முறையில் நடந்து முடிந்த […]
சென்னை:மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளின் உட்கட்டமைப்பு நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் ரூ.61.70 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பி கூறப்பட்டுள்ளதாவது: “2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவையில் திருத்திய நிதிநிலை அறிக்கையின் விவாதத்தின் போது மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள்,சென்னைப் பள்ளிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்கள். […]