ஆரஞ்சு அலர்ட்! தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!

orange alert

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், … Read more

வீடு முழுக்க தண்ணீர் சிக்னல் இல்லை! உதவி கேட்கும் விஷ்ணு விஷால்!

ChennaiFloods Vishnu Vishal

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு  ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் முடிங்கியுள்ளது. பலரும் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்  பெரும்பாலான சாலை போக்குவரத்து சேதமடைந்துள்ளது. இப்படியான வெள்ளத்தில்  மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்றும் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்ய கூறியும் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் செய்துகொடுத்துக்கொண்டும் வருகிறார்கள். குறிப்பாக  … Read more

டிச.4ம் தேதி திருவள்ளூர், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

school leave

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், சமீபத்தில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒருசில நாட்களில் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை … Read more

Weather: நடப்பு பருவத்தில் வடகிழக்கு பருவமழை 43% குறைவு – தென் மண்டல இயக்குநர்!

WeatherUpdate

நடப்பு பருவத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை 43% குறைவாக பெய்துள்ளது என இந்திய வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 123 ஆண்டுகளில் 9வது முறையாக அக்டோபரில் வடகிழக்கு மழை குறைவாக பெய்துள்ளது. … Read more

சென்னையில் பல பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை!

ChennaiRains

சென்னை மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.  சென்னை கனமழை  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான மழையும் சமீப நாட்களாக பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று ( அக்.30) சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடபழனி, சைதாப்பேட்டை, திருமங்கலம், ஆலந்தூர்,அசோக்நகர், கிண்டி, கோயம்பேடு,அரும்பாக்கம், தி.நகர் அண்ணாநகர்,ஈக்காட்டுத்தாங்கல், உள்ளிட்ட பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இரண்டு … Read more

டிசம்பர் வரைக்கும் மழை இருக்கே எப்படி சமாளிப்பாங்க – ஜெயக்குமார்

இரண்டு நாள் மழைக்கே இப்படி பதறுகிறீர்கள் இன்னும் மழை இருக்கே என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைநீர் தேங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2 நாள் மழைக்கே சென்னை இப்படி தத்தளிக்கிதே, டிசம்பர் வரைக்கும் மழை இருக்கே எப்படி சமாளிப்பாங்க என கேள்வி எழுப்பியுள்ளார். … Read more

அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்! – இந்திய வானிலை மையம்

புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 5-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தகவல். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம், தெற்கு ஆந்திரா, புதுச்சேரி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நடப்பாண்டு 29-ஆம் தேதி பருவமழை தொடங்கி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி … Read more

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை..!

இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சமீப நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், பல இடங்களில், மழை நீர் தேங்கி, சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அந்த வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் … Read more

“நாங்கள் எடுத்த நடவடிக்கையால்தான் சென்னை தப்பியது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை:அதிமுக அரசு தூர்வாரிய இடங்களை திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த வாரம் பெய்த மழையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது.குறிப்பாக,சென்னையில் சாலைகள்,சுரங்கப்பதைகள்,வீடுகள் என அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,மழைநீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு … Read more

“ஆட்சிக்கு வந்த 6 மாத காலத்திலேயே திமுக மீது மக்களுக்கு வெறுப்பு;சென்னைக்கு மாஸ்டர் பிளான்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

சென்னை வெள்ளத்தை திமுக அரசு கையாண்ட விதம் தவறானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் மழையானது மிகவும் தீவிரம் காட்டி வந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனையடுத்து,உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் … Read more