இஸ்லாமிய அமைப்புகள் இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்புக்காக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு இடையில்குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை […]