சென்னையில் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொன்ற சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னையில் பரங்கிமலை ரயில் நிலத்தில் ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி சத்யாவை கொன்ற வழக்கில் கைதான சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. முதல் முறையாக சிபிசிஐடி போலீசார் அளித்த பரிந்துரையின்படி, சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரின் குண்டாஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற சதீஷ் சிறையிலுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற மாநிலம் உள்பட பல்வேறு இடங்களில் போலி ஷிப்பிங் நிறுவன மோசடி பெரிய அளவில் நடந்துள்ளது என சென்னை காவல் ஆணையர் குற்றசாட்டு. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 கோடி மோசடி செய்த 3 பேர் மீது குண்டாஸ் சட்டம் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறுவோரிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் ஒரு மோசடி புகார். அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூ.2 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிவகங்கையை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் எனக்கு நல்ல நண்பர். அரசு வேலை வாங்கி தருவதாக அவர் சொன்னதன் […]
விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கில் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ். விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்குதொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் விக்னேஷ் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரத்தில் அறிக்கை […]
கிரிப்டோ கரன்சி மோசடியில் இரு காவலர்கள் சிக்கி ஏமாற்றம் அடைந்துள்ளதாக சென்னை காவல ஆணையர் தகவல். கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி காவலர்கள் இருவரே ஏமாற்றப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிரிப்டோ கரன்சி மோசடியில் 2 காவலர்களும், அவர்களை சார்ந்தவர்களும் சுமார் ரூ.1.44 கோடி அளவுக்கு பணத்தை இழந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்தியால் ஈர்க்கப்பட்டு பல தவணை முறையில் பணத்தை செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் சமூக வலைதளங்கள் […]
நயன்தாரா, விக்னேஷ்சிவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் காவல் ஆணையரகத்தில் புகார். நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரை கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். ரவுடிகளை ஊக்குவிக்க ரவுடி பிக்சர்ஸ் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.