விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை என்பதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையே சாட்சி என கூடுதல் ஆணையர் தகவல். திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் அப்பு எனப்படும் எஸ்.ராஜசேகர் (33) என்பவர் திருட்டு வழக்கு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை கொடுங்கையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ராஜசேகர் பிரபல ரவுடி என்றும், இவர் மீது திருட்டு, கொலை, கொள்ளை தொடர்பாக 25 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் கூறப்பட்டது. ராஜசேகரை விசாரணைக்காக அழைத்து […]