கனமழை காரணமாக சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் மழைநீர் தேங்கியுள்ளதால் டிசம்பர் 5-ம் தேதி காலை 10 மணி வரை பார்க்கிங் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கியுள்ள காரணத்தினால் வாகனம் நிறுத்துமிடம் வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. தங்களது இருசக்கர மற்றும் நான்கு […]
ஓட்டுநர் இன்றி இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை இயக்க ரூ.946.92 கோடியில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம். சென்னையில் ஓட்டுநரே இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்பந்தம் ரூ.946.92 கோடிக்கு கையெழுத்தானது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.946.92 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான மொத்த கால அவகாசம் 40 மாதங்கள் […]
கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குழுக்கள் முறையில் தேர்வான 30 பயணிகளுக்கு பரிசு. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு வழங்கபடும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் […]
கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையேயான புறவழி தடத்திற்கான சேவை 2025இல் தொடங்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பட்ஜெட் கூட்ட தொடர் இன்று நடைபெறுகிறது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், பல்வேறு நலத்திட்டங்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி குறித்து அறிவித்து வருகிறார். அதில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். அந்த […]
பேருந்து ஸ்டிரைக் கருத்தில் கொண்டு இன்று காலை 7 மணி முதல் 11 மணி மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது. இன்று பணிக்கு […]