அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை டிடிவி தினகரன் கைவிட்ட சூழலில், சசிகலாவின் நிலைப்பாடு என்ன? என்று நீதிமன்றம் கேள்வி. கடந்த 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா, தினகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுகவிற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை டிடிவி தினகரன் வாபஸ் பெறுவதாகவும், அமமுக என்ற கட்சி தொடங்கி விட்டதால் வழக்கில் இருந்து விலகி கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக […]