மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது சென்னை வந்த 2 பேருக்கு பாதிப்பு. துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது சென்னை வந்த 2 பேருக்கு பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட இருவரும் […]
ஏற்கனவே 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 16 விமானங்கள் ரத்து. தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது சென்னையில் மேலும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 72 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் என்னும் சிறிய வகை விமானங்கள் தான் ரத்து செய்யபட்டுள்ளது. தூத்துக்குடி, மைசூரு, கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை […]
அந்தமானுக்கு நவம்பர் 15 முதல் 18 வரை 4 நாட்கள் சென்னையில் இருந்து செல்லும் விமான சேவை ரத்து. அந்தமானுக்கு 4 நாட்கள் (நவம்பர் 15-18) விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஓடுபாதை பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு நாள்தோறும் 5 முதல் 7 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. அந்தமான் சுற்றுலா தலமாக இருப்பதால் பயணிகள் பெருமளவில் […]
எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். எத்தியோப்பியாவில் இருந்து இக்பால் பாஷா என்பவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிலையில், அவரிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில், ₹100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை சூட்கேஸ் மற்றும் பைகளுக்கு நடுவில் வைத்து மறைத்து கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு என முதல்வர் அறிக்கை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாகும் புதிய பன்னாட்டு விமான நிலையம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் வளர்ச்சிப் பெற்ற கட்டமைப்பு வசதிமிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு நமது திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. நம் மாநிலத்திற்கு […]
சென்னையில் விமான நிலையம் அமைக்க மாநில அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் தகவல். சென்னையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி அளித்துள்ளார். சென்னையில் 2வது விமான நிலையத்திற்காக 4 இடங்களை மாநில அரசு பரிந்துரைத்தது. ஆனால், 2 இடங்களை தேர்ந்தெடுத்துள்ள நிலையில், மாநில அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்கள் நீக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் கேட்ட கேள்விக்கு விமானநிலைய அதிகாரிகள் ஆர்டிஐயில் பதில் அளித்துள்ளனர். அதில், சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்கள் நீக்கப்படவில்லை எனவும் கட்டுமானப் பணிகள் நடப்பதால் பெயர்ப்பலகை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என விமானநிலைய அதிகாரிகள் பதில் அளித்தனர்.
மேகதாது மற்றும் மார்க்கண்டேய நதி அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். கர்நாடகா தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டி உள்ளது தொடர்ந்து சர்ச்சையை எழுப்பி வரும் நிலையில், தமிழக விவசாயிகள் இதனால் பாதிப்படையும் அச்சம் உள்ளதால் இது குறித்து நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு […]
சென்னையில் இருந்து கத்தாருக்கு கடத்த சென்ற ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஏர் கார்கோ சரக்கு முனையத்தில் இருந்து கத்தார் நாட்டு செல்லும் சரக்கு விமானத்தில் பெரும் அளவில் போதை மருந்துகள் கடத்தப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, கத்தார் செல்லும் சரக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது, பார்சல்களில் டிஜிட்டல் எடை எந்திரங்கள் இருப்பதாக தெரிந்தது. […]
பிரிட்டனிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட சளி மாதிரி. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், இந்த கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுடன் பிரிட்டனுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பிரிட்டனிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்த […]
நிவர் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.மேலும் பேருந்து சேவை ,ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு ,வெளிநாட்டு சேவைகள் ரத்து செய்யப்படுகிறது […]
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த 14 பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது, அவர்களிடம் நடத்திய சோதனையில் 38 மாத்திரை வடிவிலான தங்க பேஸ்ட் அவர்களின் மலக்குடலில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர், மலக்குடலில் இருந்து பிரித்தெடுக்கும் போது, அது 4.14 கிலோ தங்கம் என்றும் அதன் மதிப்பு ரூ. 2.16 கோடி என தெரியவந்தது. இந்த வழக்கு தொடரபாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட விமான நிலையம். இந்தியா முழுவதும் நாளை 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சில வழிமுறைகளின் அடிப்படையில் நடைபெறுகிறது. இந்நிலையில், சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில், சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர். கடந்த மாதம் 29-ம் தேதி, பெண் ஒருவர் மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, அவர் ஹைதராபாத்தில் வசித்து வருவதாகவும், தனது தாய் வசந்தா என்பவர் சென்னை, தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருவதாகவும், தற்போது கொரோனா காரணமாக அவர்களை அழைத்து வர இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தாய்க்கு இ-பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகள் எடுத்துள்ளதால், அவரை சென்னை, […]