தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் தேங்கி கடல் போல காட்சியளிக்கிறது. இந்த நிலை தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். […]
சென்னை பல்கலைக்கழகத்தில் அரியர் வைத்துள்ள பழைய மாணவர்கள் மீண்டும் செமஸ்டர் தேர்வு எழுத அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் தற்போது வெகு வருடங்களாக அரியர் வைத்துள்ள பழைய மாணவர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2015 – 2016 கல்வியாண்டிற்கு முந்தைய இளங்கலை மாணவர்களும், 2019-2020 கல்வியாண்டிற்கு முந்தைய முதுகலை பயின்றமாணவர்களும் வரும் நவம்பர் மற்றும் மார்ச் மாதம் செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது . இதற்கான முழு அறிவிப்பும், விண்ணப்பிக்க தேவையான வழிகாட்டு […]
சென்னை:ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.அதாவது, ஜனவரி மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மாணவர்களுக்கான விடுமுறைக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும்,கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு study holiday விடப்படும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் […]
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடாக ஆன்லைன் முறையில் தேர்வெழுதி பட்டம் பெற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வில் 1980 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் ஆன்லைன் தேர்வெழுத கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி இவர்கள் மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும்,தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் தலா ரூ.3 லட்சம் […]
சென்னை பல்கலைக்கழகத்தில் 2021-2022 கல்வி ஆண்டிலிருந்து எம்.பில் பட்ட படிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் மற்றும் இதன் இணைப்பு கல்லூரிகளில் எம்.பில்., பட்டப்படிப்பு 2021-2022 கல்வியாண்டிலிருந்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைப்படி, எம்.பில்., பட்டப்படிப்பு முடித்தவர்கள் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தனர். இதனையடுத்து 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு(எம்.பில்.,) முடித்தவர்கள் கல்லூரிகளில் பணியாற்ற முடியாது என்று தெரிவித்தனர். மேலும், இந்த பட்டப்படிப்பை இனி பயிற்றுவிக்க கூடாது என்றும் தெரிவித்தனர். […]
சாலையில் சிதறி கிடந்த பல்கலைகழக விடைத்தாள்கள் குறித்து போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆர்.புதுக்கோட்டை பகுதியில், வாகனம் ஒன்று வேகமாக கரூர் நோக்கி பயணித்தது. அப்போது, அந்த வாகனத்தில் இருந்து, பேப்பர் கட்டுகள் கீழே விழுந்த நிலையில், வாகனத்தில் இருந்தவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் சென்றனர். அந்த பேப்பரை எடுத்து பார்த்த போது, அந்த ,பேப்பர்கள் அனைத்தும், பல்கலைக்கழக தேர்வில் எழுதப்பட்ட, திருத்தப்படாத விடைத்தாள்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, மாயனூர் காவல்நிலையத்தில், பொதுமக்கள் புகார் அளித்தனர். […]
கல்லூரி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு வரும் 21ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது இறுதி ஆண்டு பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை உண்டானதை அடுத்து மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வகையில் தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் போது. ஏற்பட்ட வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். […]
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில், போலீசார் மற்றும் மாணவ, மாணவிகள் நடுவே பெரும் மோதல் வெடித்தது. சென்னை: சென்னை பல்கலைக்கழகம் துவங்கி 160 வருடங்கள் ஆகிவிட்டன. இதையொட்டி அங்கு ஆண்டு விழா நடைபெறுகிறது.இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். பகல் 12 மணிக்கு விழா துவங்கவிருந்த நிலையில், 11.30 மணியளவில் அதாவது, முதல்வர் பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு சற்று நேரம் முன்பாக பல்கலைக்கழகத்தில் செயல்படும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் அமைப்பில் உள்ள […]
தொலைதூரக்கல்வி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி, இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்கள் (A15, C16, A16, C17, A17 அணியினர் மற்றும் அதைத்தொடர்ந்த அணியினர்) தங்களின் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு டியூஷன் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். இதுகுறித்து கூடுதல் விவரங்களை www.ideunom.ac.in, : www.unom.ac.inஎன்ற இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். source: dinasuvadu.com