சென்னை : பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, கடந்த 2018இல் தனது சமூக வளைதள பக்கத்தில், பெரியார் சிலையை உடைப்பேன் என்றவாறு கருத்து பதிவிட்டு இருந்தார். மேலும், திமுக எம்பி கனிமொழி குறித்து அப்போது அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இந்த இரு புகார்களும் ஈரோடு மற்றும் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், […]
Senthil Balaji – கடந்த வருடம் ஜூன் மாதம் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாகத்துறையின் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையானது, எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து, இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக பதியப்பட்டு உள்ளது. அதனால் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று […]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையில், தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 […]