இன்று சென்னை எழும்பூர் -சேலம் இடையே ஆன விரைவு ரயில் இரண்டு நாள்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இணை பெட்டி இல்லாததால் சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 10.45 சேலம் புறப்படும் ரயில் எண் 22153 ரயிலும் , நாளை இரவு 09.20 மணிக்கு சேலத்தில் இருந்து – சென்னைக்கு வரும் ரயில் எண் 22154 ரயிலும் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.