சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இன்று இது வலுப்பெற்று, தமிழகம் நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், உருவாக தாமதம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5.30 மணி நிலவரப்படி அடுத்த 24 மணி நேரத்தில் தான் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, […]
சென்னை : தமிழகத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, சென்னையில் இன்று அதிகாலை 4 மணி வரை விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு 11.30 மணி அளவில் கரையைக் கடந்த நிலையில், சென்னை விமான நிலைய செயல்பாடுகளை நேற்று நள்ளிரவு 1 மணி முதல் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 13 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை தொடங்கியுள்ளது. முன்னதாக, ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலைய ஓடுபாதையை […]
சென்னை : வங்கக்கடலில், உருவாகி இருக்கும் ஃபெஞ்சல் புயல், சென்னைலியிருந்து 140கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது, 12கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மதியம் அல்லது மாலையில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயலின் எதிரொலியாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழையானது கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் வெள்ள அபாய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 30 பேர் […]
சென்னை : கடந்த சில நாட்களாகவே பெய்த கனமழை காரணமாகப் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் தாக்கம் ஏற்படாமல் தற்போது மழை மெல்ல மெல்லக் குறைந்துள்ளது. இதன் காரணமாகப் பழைய படி சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கிறது. சென்னையில் கனமழை பெய்த போது தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக விரைவாகப் பல இடங்களில் […]
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கி இருந்ததால், மாற்று ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. ஆனால், நேற்றிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில், வியாசர்பாடி – பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்டது. இதனால், ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட மற்றும் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் மற்றும் சென்ட்ரலில் இருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. […]
சென்னை : சென்னை பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று (15-10-2024) நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எந்தெந்த ரயில்கள் சென்னை சென்ட்ரலில் மாலை 4.35-க்கு புறப்பட வேண்டிய 16203 திருப்பதி விரைவு ரயில், முழுமையாக ரத்து. திருப்பதியில் மாலை 6.05-க்கு புறப்படவுள்ள 16058 சென்னை சென்ட்ரல் ரயில், முழுமையாக ரத்து. சென்னை சென்ட்ரலில் இரவு 9.15-க்கு புறப்படவுள்ள 16021 மைசூர் காவேரி ரயில், […]
சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, மெரினா, கிண்டி, தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தபோதும், அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கனமழை எதிரொலியாக சென்னை வேளச்சேரி மேம்பாலங்களில் 2வது நாளாக கார்கள் அணிவகுத்து நிற்கின்றனர். வேளச்சேரி […]