சென்னை : மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, […]
சென்னை : நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் கனமழை எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலையில், திடீரென சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. ஆம், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பகல் 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. அதன்படி, அண்ணாநகர், வில்லிவாக்கம், பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கிழக்கு திசையில் […]
சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி சார்பில் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் – அமைச்சர் […]