சென்னை: சென்னை மாநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக கடந்த ஓராண்டாக பொறுப்பில் இருந்து வந்த சந்தீப் ராய் ரத்தோரை தற்போது இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அருண் ஐபிஎஸ் முன்னதாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பில் இருந்து வந்தார். சந்தீப் ராய் ரத்தோர் தற்போது […]
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு டிசம்பர் 31 அன்று இரவு சென்னையில் 368 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இதுவரை டிசம்பர் 25 முதல் 360 வாகனங்கள் விதிகளை மீறியதால் சீஸ் செய்யப்பட்டது எனவும், ரேஸில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிக்க தெளிவாக இரவில் படம்பிடிக்க கூடிய டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார். மேலும், 18 […]
கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் தகவல். சிம் ஸ்வாப் என்ற முறையில் கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேரை காவல்துறை கைது செய்து சென்னை அழைத்து வரப்பட்டது என்றும் கூறினார். அதாவது, மற்றொரு […]
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறித்த புகார்களையும், தகவல்களையும் கூற பிரத்யேக முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்கை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பல நடந்து வருகிறது. அதனை தடுக்கும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள இந்த பிரிவுக்கான அலுவலகம் துணை ஆணையர் […]
சமீபத்தில் சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, தமிழக ஆபரேஷன் பிரிவு டிஜிபியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால் சென்னை மாவட்ட காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன், தமிழக செயலாக்கம் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். புதிய காவல் ஆணையர் மகேஷ் குமாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார் ஏ.கே.விஸ்வநாதன். சென்னையின் 107-வது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, தமிழக ஆபரேஷன் பிரிவு டிஜிபியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால் சென்னை மாவட்ட காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். மேலும் மகேஷ் குமார் அகர்வால், கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு குழுவில் சென்னை வடக்கு மண்டல சிறப்பு ஐபிஎஸ் அதிகாரியாகவும் உள்ளார். இந்நிலையில் சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன், தமிழக செயலாக்கம் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், வரும் 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் விக்ரம், ராஜ் மாதங்கி ஆகியே இருவரும் 14ம் தேதி ஆஜராக வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் ஆகியோர் வரும் 16ம் தேதி மறுவிசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அன்றைய தினம் குறுக்கு விசாரணை நடத்துவதற்காக அப்பல்லோ நீரழிவு […]