தமிழகம்:அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ள நிலையில்,இன்று முதல் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில்,சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர்,கடலூர்,விழுப்புரம்,பெரம்பலூர்,அரியலூர்,நாமக்கல்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,தூத்துக்குடி,நெல்லை,கன்னியாகுமரி,தஞ்சை,திருவாரூர்,நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]