அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஐந்து நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 48-மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை:தமிழகத்தில் நாளை தஞ்சை,திருவாரூர், உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தில் தஞ்சை,திருவாரூர், நாகை,மயிலாடுதுறை,கடலூர், ராமநாதபுரம்,புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும்,நாளை காரைக்கால் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி,தென்காசி,தேனி, மதுரை,விருதுநகர்,திருச்சிராப்பள்ளி,கரூர்,திருப்பூர் நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை […]
காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியால் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் ,காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியால் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது .அதேபோல் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தென் கிழக்கு வங்கக்கடல், கேரளாவை ஒட்டியுள்ள பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல […]