புதிய சீசன்..! புதிய பொறுப்பு.. தோனி போட்ட பதிவால் எகிறும் எதிர்பார்ப்பு

MS Dhoni: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் தோனி போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக இருந்து வருகிறார். தோனிக்கு 42 வயதாகும் நிலையில் கடந்த சீசனில் கோப்பை வாங்கிய பிறகு ரசிகர்களுக்கு பிரியா விடை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் … Read more

தனுஷின் ‘ரகிட ரகிட’ பாடலுக்கு நடனமாடி கெத்து காட்டிய சிஎஸ்கே வீரர்கள்.!

தனுஷின் ரகிட ரகிட பாடலுக்கு சிஎஸ்கே வீரர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக மார்ச் – ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தடை செய்யப்பட்டது. அதனையடுத்து ஐபிஎல் நிர்வாகம் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதற்காக தயாராகி வரும் சென்னை சூப்பர் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் குறித்த கருத்துக்கணிப்பு

இன்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியாளர்களுக்கான தேர்வில் 78 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி உட்பட 11 பேர் வீரர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த தேர்வில் மக்களாகிய உங்களது கருத்து என்னவென்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் உங்களது விருப்பானது எதுவோ அதற்கு உங்களது வாக்கினை அளியுங்கள் 1.அபாரமான தேர்வு 2.சுமாரான தேர்வு 3.நல்ல தேர்வு இல்லை உங்கள் விடைகளை அளிக்க கிழே கமெண்ட் செய்யவும்……

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் துவங்கியது அஷ்வினை விட்டுகொடுத்த சென்னை…!!

பத்து ஆண்டுகளுக்கு பிறகு 11-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடக்கவுள்ளது. இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை மீண்டும் களத்தில் இறங்க உள்ளதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் பின்பற்றப்படும் சில விதிமுறைகள் இதோ ஏலத்தில் வீரர்களை வாங்க ஒரு அணி ரூ.80 கோடி வரை செலவு செய்யலாம். ஏற்கனவே தக்க … Read more

ஏப்ரல் 6ம் தேதி அன்று மும்பையில் ஐ.பி.எல் தொடக்கம்

11வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் 6ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. முதல் போட்டி ஏப்ரல் மாதம் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இறுதிப்போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில் மே மாதம் 27ம் தேதி நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து.விளையாட்டுகள் இந்த ஆண்டு சற்று வேறுபட்ட நேரத்தில் நடைபெறும். இரவு நேர போட்டிகள் இரவு 7 மணி முதல் ஆரம்பமாகும். மாலை நேர போட்டிகள் 4 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கு தொடங்கும். மேலும் ஐபிஎல் ஏலம் பெங்களூரில் ஜனவரி 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ளது