சென்னையில் இரவு நேர ரோந்து பனியின் போது பிரசவ வலியால் துடித்த கர்பிணி பெண்ணுக்கு உதவிய காவல்துறை ஆய்வாளரான ராஜேஸ்வரிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். சென்னை அயனாவரம் அடுத்த நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தியாகு. இவரது மனைவி ஷீலா. நிறைமாத கர்ப்பிணியான இவர் தன் தாய் வீட்டில் தங்கி இருக்கிறார். நேற்று இரவு ஷீலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனங்களை தேடி கே.ஹெச் சாலையில் நின்று இருக்கிறார். […]