தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 2022ஆம் ஆண்டு தனியார் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் வேற்று மதத்தினர் (சிறுபான்மையினர்) பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என கூறப்படுகிறது. அதாவது, தீபாவளி பண்டிகையில் இந்துக்கள் பட்டாசு வெடிப்பதற்கு எதிராக வேற்று மதத்தை சேர்ந்த சிறுபான்மையினர்கள் தான் நீதிமன்றத்தின் வழக்கு தொடர்கிறார்கள் என்று கருத்து கூறியதாக அவர் மீது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது . சமூக சுற்றுச்சூழல் ஆதரவாளர் பியூஸ் […]
அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மீதான 4 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரம் ஆளுங்கட்சியை எதிர்த்து மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை, ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து, அ.தி.மு.க எம்.பியும், முன்னாள் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றி சீர்செய்ய திட்டம் வகுக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த 2018-ல் தூத்துக்குடியில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். 100-வது நாள் போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் கடந்த 2018-ம் ஆண்டு ஆலை […]
தமிழக அரசு அமைத்த நீட் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து,தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் என்பவர் சென்னை […]
மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கும் வகையில் திட்டம் வகுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். சென்னை உயர்நீதிமன்றத்தில், சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக மாணவர்களின் பள்ளிகள் மூலம் சமைக்கப்படாத உணவுப் பொருட்கள் 15 நாட்களுக்கு […]
ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய மனு. மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு எழுதும் நடைமுறை அமலில் உள்ள நிலையில், ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் போதிய இடங்கள் கிடைப்பது இல்லை என்றும், இடஒதுக்கீடும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை என்றும் குற்றசாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக, அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. […]
மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க கோரி வழக்கறிஞர் ராஜசேகர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பலரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்தனர். தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, அனைத்து விதமான மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் […]
கொரோனாவால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குறைவான பேருந்துகள் இயங்குவதால் +1,+2 மாணவர்கள் குறித்த நேரத்தில் பொதுத்தேர்வுக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது +1,+2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதேபோல மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் 315 வாக்கு மையங்களில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை 315 வாக்கு மையங்களில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக […]
கனிமொழி மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுகவின் கனிமொழி வெற்றிக்கு எதிராக சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.ஆனால் இந்த வழக்கை நிராகரிக்கோரி கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.அப்போது தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும்என்று வழக்கு தொடர்ந்த சந்தானகுமார் மற்றும் கனிமொழி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் […]
தளபதி விஜய் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏ..ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. இப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்த பிகில் படத்தின் கதை தன்னுடைய பிரேசில் கதையோடு ஒத்துப்போவதாக கூறி அம்ஜத் மீரான் எனப்வர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்காக தனக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று முடிந்தது. அதனை விசாரித்த நீதிபதி, […]