மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்னும் புறநகர் பகுதியில் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருகிறது. மிக்ஜாம் புயல் பாதிப்பு ஆய்வு.! முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று மத்திய குழு முக்கிய ஆலோசனை.! ஏற்கனவே பாதிக்கப்பட்ட 4 மாவட்ட பகுதி மக்களுக்கு, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ.6000 உதவி தொகை வழங்கப்படும் எனவும், […]
சென்னை மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் 6000 ரூபாய் நிவாரண தொகை பெறலாம் எனவும் அதற்கான வழிமுறைகளும் வெளியாகியுள்ளன. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி முழுவதும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பெரும்பாலான கடலோர பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்தோர் பெரிதாக பாதிக்கப்பட்டனர். இன்னும் புறநகரில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்றும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எங்கள் வரிப்பணம் தானே..? அவங்க […]
மிக்ஜாம் புயலின் பாதிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சில பகுதிகளில் இன்னும் முழுதாக நீங்கால் இருக்கிறது. இன்னும் புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை அகற்ற ஊழியர்கள் மும்முரமாக வேலை செய்து வருகின்றனர். இந்த கனமழையால் பள்ளி மாணவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாணவர்களின் பாட புத்தகங்கள் நீரில் மூழ்கின. பள்ளிக்கூடங்கள் சேதமடைந்து உள்ளன. இது குறித்து இன்று புதுக்கோட்டையில் மாணவர்கள் கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு நடவடிக்கைகள் […]
சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.08) விடுமுறையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. மழை பாதிப்பு எதிரொலியாக சென்னையில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நிவாரண மற்றும் மீட்பு பணிகள் சில இடங்களில் நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 5-ஆவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு […]
Michaung Cyclone : மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதியாக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு. அதன்படி, மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை எதிர்கொள்ள தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு தனது தொகுப்பின் கீழ் மாநிலங்களுக்கு வழக்கமாக வழங்கும் மாநில பேரிடர் மீட்பு பணிகளுக்கான SDRF நிதியின் கீழ் 2வது தவணையாக ரூ.493.60 ஆந்திரா மாநிலத்திற்கும், ரூ.450 கோடி தமிழகத்துக்கும் முன்கூட்டியே வழங்க […]
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழைநீர் புகுந்து, புறநகர் முழுக்க வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை முழுதாக வெளியேற்ற ஊழியர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மட்டுமல்லாமல் பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். முதலமைச்சரிடம் வெள்ள சேதம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி! மிக்ஜாம் புயல் – மழைவெள்ள பாதிப்புகளை சரி செய்ய நிவாரண உதவிகளை மேற்கொள்ள […]
சென்னை புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மிக்ஜாம் புயல் (Michaung cyclone) மற்றும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், சில இடங்களில் மழைநீர் […]
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல்(Michaung cyclone) சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை வெகுவாக பாதித்துள்ளது. இன்னும் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்ற வருகிறது. மழைவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் மக்கள் தங்கள் பகுதிக்கு மின்சாரம், உணவு உள்ளிட்ட […]
வங்கக்கடலில் உருவாகி வடதமிழகத்தை குறிப்பாக தலைநகர் சென்னையை மிரட்டி, ஆந்திர கடற்கரையில் கரை ஒதுங்கியது மிக்ஜாம் புயல். இந்த புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் முழுதாக நீங்கவில்லை. இன்னும் பல்வேறு இடங்களில் மீட்பு பணிக்க தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழைநீர் இன்னும் பல்வேறு பகுதிகளில் வடியாமல் இருந்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியில் மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு நபர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக விற்பனை நிலையங்கள் வைத்துள்ளவர்கள் பெரிய அளவில் […]
‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக்கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் (5-12-2023) அன்று கடிதம் எழுதியுள்ளார். […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பெய்த கனமழை பொதுமக்கள் தினசரி வாழ்வை வெகுவாக பாதித்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டன. மழைநீர் சாலைகளில் தேங்கியது. இதனால் இதுவரை மழைநீர் தேங்காத இடங்களில் கூட தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. அதனை மீட்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில், குறிப்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தன. மேலும் வீதிகளில் தேங்கிய மழைநீரும் பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். சென்னை முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிந்து சில […]
சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் இருந்து நகர்ந்து சென்ற மிக்ஜாம் தற்போது தெற்கு ஆந்திர பிரதேசம் பாபட்லா கடற்கரை பகுதியில் கரையை கடந்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மிக்ஜாம் புயல்… ரூ.5,000 கோடி நிவாரணம்.. வெள்ளம் சீரமைப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்! தமிழக அரசை போல தற்போது ஆந்திர அரசும் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]
மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு நடிகர்களும் உடன் பிறந்த சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கினது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மிச்சாங் புயலால் சென்னை மோசமான நிலையில் உள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அனைத்து இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், பெரும்பாலான சாலை போக்குவரத்து […]
சென்னையில் பெய்துவரும் மழையில் தனது வீட்டிற்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார். மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தில் சென்னை தற்போது திணறி வருகிறது. சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் தற்போது வெகுவாக குறைந்து சென்னையை விட்டு விலகி மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. மழையின் அளவு குறைந்தாலும் இன்னும் தேங்கிய மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். டிசம்பர் 4 நேற்று (திங்கள்கிழமை) இரவு முழுவதும் சென்னையில் பலத்த […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) சென்னையை புரட்டி போட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை விட மிக்ஜாம் புயல் பாதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு சென்னை புறநகர் மட்டுமல்லாது சென்னை மத்திய முக்கிய பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய அரசு சார்பிலும், பல்வேறு தன்னார்வலர்களும், அரசியல் அமைப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். தற்போது […]
சென்னை மற்றும் அதனை சுற்றுவட்டார மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களையும் மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) கடுமையாக தாக்கி வருகிறது. சென்னையில் இருந்து 90கிமீ தொலைவில் வங்கக்கடலில் மிக்ஜாம் புயலானது நிலைகொண்டுள்ளது. மணிக்கு 10கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக அதி கனமழை அளவு கொட்டி தீர்த்து வருகிறது. இன்று இரவு வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . கனமழை […]
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. கனமழை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனால் சென்னையே வெள்ளக்காடாக மிதக்கிறது. அதே சமயம் மிக்ஜாம் புயல் எதிரொலியால் கனமழை பெய்யும் என்பதால் , சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை காரணமாக பெரும்பாலான இடஙக்ளில் மழைநீர் பெருக்கெடுத்து செல்கிறது . அதனை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள், மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மிக்ஜாம் புயலாந்து நாளை முற்பகல் தான் கரையை கடக்கும் என்பதால் இன்னும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய […]
வங்கக்கடலில் உருவான மிகஜாம் புயலானது (Michaung Cyclone) தற்போது கரையை கடந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் இருக்கும் இந்த புயலானது 14கிமீ வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது . இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகனமழை பெய்து வருகிறது. நேற்றும் இன்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் அதீத கனமழை காரணமாக நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் விடுக்கபட்டு உள்ளது. இதனால் […]