கொரோனா தடுப்புகாக சென்னையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது. இதுவரை 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் 25000 தெருக்கள் மற்றும் சாலைகளில் 10.18 லட்சம் லிட்டர் கிருமி நாசினி மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ஆலிப் ரெசிடென்ஸி ஓட்டலில் 4வது நாளாக வருமானவரி சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரில் திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழிலதிபர் நாசருக்கு சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை 4வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை கிரவுன் பிளாசா என்ற நட்சத்திர ஹோட்டல் சுமார் 24 கோடியே 88 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து வரி கட்டவில்லை என கூறி சீல் வைக்க வந்த அதிகாரிகள், நிர்வாகம் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ளது கிரவுன் பிளாஸா ஹோட்டல். பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மத்திய அமைச்சர்களின் நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஒட்டலுக்கு பல ஆண்டுகளாக சொத்துவரி கட்டப்படவில்லை என்றும், மாநகராட்சி […]
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன்,திருமாவளவன்,சீமான்,திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்,சாலை மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற முஸ்லிம் அமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கம் அருகே […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே அயப்பாக்கத்தில் தனியார் புக் ஸ்டால் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.40 லட்சம், 85 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஆவடி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை சர்வேதச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோடைக்காலம் தொடங்கியதையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் சென்னை மெரினா காந்தி சிலை அருகில் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கினார்.
சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் (Chennai Metropolitan Development Authority, CMDA Chennai-சிஎம்டிஏ)யின் எல்லை விரிவாக்க அரசாணைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கில் விசாரணை மார்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்பைத் தடை செய்த பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் சீமான், வேல்முருகன், திருமுருகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நாம் தமிழர்,தமிழக வாழ்வுரிமை கட்சி,விசிக,முஸ்லிம் மக்கள் முன்னேற்ற கழகம்,மே 17 இயக்கம்,பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகளின் தொண்டர்கள் ஏராளமானோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
சென்னை மாநகரில் மாநகராட்சிக்குட்பட்ட உத்தண்டி கடற்கரைக்கு அருகே உள்ள பகுதிகளில் அரசின் விதிமுறைகளை மீறி பங்களா கட்டியுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த விதி முறை மீறல்கள் குறித்து விளக்கமளிக்கவும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை விமான நிலைய கூடுதல் வசதிக்காக 151 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்துள்ளனர்.கோலப்பக்கம், மணப்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் கௌல் பஜார் ஆகியவற்றில் நிலம் கையகப்படுத்தப்படும்.இந்த இடங்களில், இரண்டாம் ஓடுபாதைக்கான எளிய அணுகுமுறை, லைட்டிங் அமைப்புகளை நிறுவுதல், விமான நிலையங்களுக்கான கட்டுமானம் மற்றும் எரிபொருள் பண்ணை போன்றவை அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.இதை குறித்து பேசிய விமான அதிகாரி ஒருவர்,”நாங்கள் நீண்ட காலமாக மாநில அரசாங்கத்தை கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு சில மாதங்களில் நிலத்தை பெற நாங்கள் நம்புகிறோம். நில கையகப்படுத்துதல் பின்னர் செயல்முறை தொடங்கும். பயணிகள் […]
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இன்றும் பல இடங்களில் பேருந்து ஓட வில்லை. இதனால் பெரிதான அளவில் பாதிக்க படும் மக்கள் நாய் வண்டியில் ஏறி செல்கின்றது அதிர்ச்சியை தருகிறது.பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கத்தில் இருந்து பயணிகள் கோயம்பேட்டிற்கு நாய் வண்டி என்று கூட பார்க்கலாம் கட்டணம் கட்டி செல்கிறார்கள். இதன் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க திட்டம் துவங்கியுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் 67 வருவாய் கிராமங்களைச் சேர்த்து 122 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாவட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசு செய்திக்குறிப்பில் வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை ஆகிய 3 வருவாய் கோட்டங்கள் 16 வட்டங்களை உள்ளடக்கி சென்னை மாவட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது சென்னையிலுள்ள 57 இடங்களுடன் மேலும் 67 கிராமங்கள் இணைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளன. இந்தத் […]