கொரோனா சிகிக்சை மையம் அமைக்க தனியாருக்கு அனுமதி என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழகம் மாணவர் விடுதியில் தயாராகிவரும் சிகிச்சை மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் கொரோனா சிகிக்சை மையம் அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். கொரோனா சிகிக்சை மையம் அமைக்க தனியார் ஹோட்டல், மருத்துவமனை, அசோசியேஷன் உள்ளிட்டவை அனுமதி பெறலாம் என அவர் தெரிவித்தார். […]