Tag: chennai airport

“Oh My God.. எப்போ?”.. திருவண்ணாமலை நிலச்சரிவு… நடிகர் ரஜினிகாந்த் அதிர்ச்சி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேங்ஸ்டர் படமான ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இப்படத்தின் பெரும்பகுதி சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் புறப்பட்டார் ரஜினிகாந்த். இன்று காலை ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமானம் நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம், தி.மலை நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, […]

chennai airport 4 Min Read
Rajinikanth Chennai Airport

சீரான சென்னை விமான நிலையம்… மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கியது.!

சென்னை : தமிழகத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, சென்னையில் இன்று அதிகாலை 4 மணி வரை விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு 11.30 மணி அளவில் கரையைக் கடந்த நிலையில், சென்னை விமான நிலைய செயல்பாடுகளை நேற்று நள்ளிரவு 1 மணி முதல் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 13 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை தொடங்கியுள்ளது. முன்னதாக, ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலைய ஓடுபாதையை […]

chennai airport 4 Min Read
Chennai Airport

ஃபெஞ்சல் புயல் எதிரொலி : இண்டிகோ விமான சேவைகள் ரத்து!

சென்னை : கடந்த ஒரு 3 நாட்களாக சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இருப்பினும், விமான சேவைகள் எந்த வித தடையுமின்றி நடந்தது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஃபெஞ்சல் புயலின் எதிரொலியாக இண்டிகோ விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனை விளைவாக மோசமான வானிலையால்  சென்னை விமான நிலையம் வந்த […]

chennai airport 3 Min Read
Indigo Plane Cancelled

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்., சிக்கிய 11ஆம் வகுப்பு மாணவர்கள்.!

சென்னை : தற்போது வெடிகுண்டு மிரட்டல்களானது, இ-மெயில், குறுஞ்செய்தி, தொலைபேசி என பல்வேறு வழிகளில் விமான நிலையம், பள்ளிகளுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.  அடிக்கடி இதுபோன்ற போலி மிரட்டல்கள் வந்தாலும், காவல்துறையினர் தொடர்ந்து உரிய சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிவறை பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருந்ததாக காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக குறுந்செய்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு மிரட்டல் செய்தியை […]

#Chennai 4 Min Read
Bomb Threat in Chennai Airport

திருப்பதி லட்டு விவகாரம் : நடிகர் ரஜினிகாந்த் சொன்ன பதில்!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதமான லட்டு குறித்த சர்ச்சை நாடு எங்கிலும் பேசும் பொருளாகவே அமைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என பலர் இது குறித்து விமர்சித்து பேசி வருகின்றனர். அதில் பலர் கூறியது சர்ச்சையாகவும் மாறி பின் தணிந்தது. அந்த வகையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த், இந்த லட்டு விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். வெற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை […]

#Chennai 5 Min Read
tirupati laddu rajinikanth

டாப் நிறுவனங்கள்., ரூ.7,618 கோடி முதலீடு., 11,516 வேலைவாய்ப்புகள்.! மு.க.ஸ்டாலின் தகவல்.!

சென்னை : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் தனது பயணத்தை முடித்துகொண்டு இன்று காலை முதலமைச்சர் சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். அதன் பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளை நேரில் […]

#Chennai 6 Min Read
Tamilnadu CM MK Stalin Press meet at Chennai Airport

INDvsBAN : லீவுலாம் முடிஞ்சது..! சென்னை வந்தடைந்தனர் ரோஹித் மற்றும் கோலி!

சென்னை : வங்கதேச அணி வரும் செப்டம்பர்-19 ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மட்டும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவதாக வரும் செப்-19 ம் தேதி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது தொடங்கவுள்ளது. இந்த முதல் டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 6 […]

Bangladesh Tour Of India 2024 5 Min Read
Virat - Rohit

மகா விஷ்ணு அதிரடி கைது! தீவிர விசாரணையில் ஈடுபடும் காவல்துறையினர்!

சென்னை : மாற்றுத்திறனாளிகளை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை மேற்கொண்ட மகா விஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க  சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் உள்ள அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மூடநம்பிக்கையை விதைக்கும் வகையிலும், மாற்று திறனாளிகளை காய படுத்தும் வகையிலும் சொற்பொழிவு ஏற்றிருந்தார். இவர் பேசும் போதே இது மதரீதியாக மாணவர்களிடம் பேச வேண்டாம் என […]

Anbil Mahesh 6 Min Read
Maha Vishnu Arrested

மைக்ரோசாப்ட் விவகாரம் – சென்னையில் 2-வது நாளாக தொடரும் பாதிப்பு ..!

சென்னை : மைக்ரோசாப்ட் விண்டோஸை மென்பொருளை சார்ந்து இயங்கும் சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கிரவுட்ஸ்டிரைக் நிறுவனமானது மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பல்வேறு மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் பால்கன் சென்சாரை நேற்று முன்தினம் (ஜூலை-18) அன்று  அப்டேட் செய்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், கிளவுட்சர்வர் தொழில்நுட்ப பயன்பாட்டைக் கொண்டு இயங்கி வரும் விமான சேவை உள்பட பல்வேறு […]

chennai airport 4 Min Read
Chennai Airport

சென்னையில் கனமழை.! விமான சேவைகள் கடும் பாதிப்பு.! 

கனமழை: சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வண்ணம் நேற்று நள்ளிரவு தலைநகர் சென்னையில் உட்பகுதி மற்றும் புறநகர் என பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.  இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் சிறிய அளவில் மழைநீர் தேங்கும் நிலை உருவானது. வெவ்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சரிந்தன. நள்ளிரவில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த காரணத்தால் சென்னை விமான நிலையத்தில் […]

chennai airport 3 Min Read
Heavy Rain in Chennai Airport

வெள்ளத்தில் மூழ்கிய துபாய்…75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை.!

Dubai floods: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத கனமழை பெய்து, முக்கிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையம் சீர்குலைந்துள்ளன. இது கடந்த 75 ஆண்டுகளில் பெய்த மிகப்பெரிய மழை என்று அரசாங்கம் கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் வெறும் 12 மணி நேரத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் […]

#Chennai 3 Min Read
uae rain

கனமழையால் தத்தளிக்கும் ஐக்கிய அரபு அமீரகம்…10 விமானங்கள் ரத்து.!

UAE Rain: ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து செயப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், துபாய், புஜைரா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு அதிகப்படியான மழைபொழிவால், துபாய் நகரம் வெள்ளக்காடாய் மாறியுள்ளது. கடந்த 24 […]

#Heavyrain 3 Min Read
uae rain

லட்சத்தீவுக்கு விமான சேவை.! சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு.!

சென்னை விமான நிலைய நிர்வாகம் இன்று இரண்டு முக்கிய வழித்தடங்கள் வழியாக செல்லும் விமான சேவை அறிவிப்பை வெளியிட்டுளளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அயோத்தி மற்றும் லட்சத்தீவில் உள்ள அகாட்டி ஆகிய இடங்களுக்கு விமான சேவை செயல்படும்  சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்த விமான சேவையானது அடுத்த வாரம் முதல் துவங்க உள்ளது. மாலத்தீவு விவகாரம்.. பெரிய திட்டத்துடன் லட்சத்தீவில் களமிறங்கிய டாடா.! அயோத்தியில் வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக […]

Ayodhya 4 Min Read
Chennai Airport - Ayodhya - Lakshadweep Islands

பொங்கல் பண்டிகை எதிரொலி – கிடுகிடுவென உயர்ந்த உள்ளூர் விமான டிக்கெட் விலை!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். வார இறுதி நாட்கள், பொங்கல் பண்டிகை என தொடர் விடுமுறை என்பதால், வெளியூரில் பணிபுரிபவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்கள் தங்கள் சொந்த […]

chennai airport 5 Min Read
chennai domestic flight

சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடல்!

மிக்ஜாம் எதிரொலியால் சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன்பின், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. சிறிது காலதாமதமாக புயலுக்கு மிக்ஜாம் புயல் என்று பெயர் சூட்டப்பட்டது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த தீவிர புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் […]

chennai airport 4 Min Read
Chennai Airport

மிரட்டும் மிக்ஜாம் புயல்… தமிழகம் முழுவதும் 6,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்… வெளியான முக்கிய தகவல்..

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் புயலாக உருவெடுத்துள்ளது. இந்த மிக்ஜாம் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில் இருக்கும் மிக்ஜாம் புயல், நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை முற்பகலில் தீவிர புயலாக கரையை கடக்கிறது. அதன்படி, மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மழை மற்றும் […]

#Chennai 6 Min Read
fire fighters

மிக்ஜாம் புயல் எதிரொலி… சென்னையில் 20 விமானங்கள் ரத்து!

கடந்த 27 ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதையடுத்து, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இன்று தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் நிலை கொண்டுள்ளதாகவும், மணிக்கு சுமார் 8 கிமீ வேகத்தில் […]

#Chennai 5 Min Read
chennai flights

பேங்காக்கிலிருந்து அரியவகை மிருகங்கள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில்.! பறிமுதல்

பேங்காக்கிலிருந்து கடத்திவரப்பட்ட அரியவகை மிருகங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. பேங்காக்கிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவரின் உடைமையை  சோதனையிட்ட போது அவரது பையில் அரியவகை மிருகங்கள் இருந்ததாகக்கூறி சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 மர்மோசெட் குரங்குகள், 8 சுகர்கிளைடர்ஸ் மற்றும் 3 டெகு பல்லிஇனங்கள் ஆகியவற்றை பேங்காக்கிலிருந்து கடத்தி வந்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து விலங்குகளும் ஆரோக்யமான உடல்நிலையில் இருப்பதாக வனவிலங்குகள் சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரமும் இதே போன்று […]

Bangkok 3 Min Read
Default Image

#Breaking : மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 7 விமானங்கள் ரத்து.!

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது கரையை கடந்து வருவதால் சென்னை உள்ளிட்ட வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், புயல் காரணமாக பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால்,  சென்னை விமான நிலையத்தில் இருந்து 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதில், கொழும்பு, கடப்பா, தூத்துக்குடி, மும்பை ஆகிய ஊர்களுக்கு […]

- 2 Min Read
Default Image

மாண்டஸ் புயல் எதிரொலி.! சென்னையில் 11 விமான சேவைகள் பாதிப்பு.!

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 2 விமானங்கள் மற்றும் விமான நிலையத்திற்கு வரும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழக்தை நெருங்கி வருவதன் காரணமாக நாளை வடதமிழகம் பகுதியில் கனமழை பெய்ய உள்ளது என்பதால், அதனை எதிர்கொள்ள பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, விமான சேவைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமானநிலையத்திற்கு வரும் தூத்துக்குடி மற்றும் ஷீரடியில் இருந்து வரும் விமானங்கள் , சென்னையில் இருந்து […]

- 2 Min Read
Default Image