சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க,செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். நேற்று சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிறையிலுள்ள சிவசங்கர் […]