பேரியம் ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைக்கவும், கொண்டு செல்லவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தடையை மீறி இரசாயனம் கலந்த பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “உச்சநீதி மன்றம் தனது 29.10.2021 ஆம் தேதியிட்ட தீர்ப்பில் 2016,2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் பல்வேறு வழக்குளில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட […]