திருவள்ளூர் செம்பரப்பக்கம், புழல் ஏரிகளில் இருந்து மதியம் 1 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முதற்கட்டமாக 500 கனஅடி உபரி நீர் இன்று பிற்பகல் 1 மணிக்கு வெளியேற்றப்பட உள்ளது. மேலும், உபரிநீர் திறப்பின் காரணமாக கரையோர மக்களுக்கு ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, நாரவாரிக்குப்பம், வடகரை, புழல், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதனால் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இன்று காலை ஏரிக்கு வரும் நீர்வரத்து 6000 கன அடியாக உயர்ந்துள்ளது.எனவே ஏரியிலிருந்து திறந்து விடும் உபரி நீரின் அளவு […]
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தை அடுத்து இன்று மதியம் 12 மணியளவில் 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியானது மொத்தமாக 23.5 அடி கொண்ட நிலையில் தற்போதைய ஏரியின் நீர்மட்டம் 22.15ஆக உயர்ந்துள்ளது.மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்து 3000 கன அடியாக உயர்ந்துள்ளது.எனவே ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிவர் புயல் காரணமாக பெய்து கனமழையால் நிறைந்த செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது .இந்த […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 3000 கன அடியாக இருந்த நிலையில், தற்பொழுது 7,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல், தற்போது அதிதீவிர புயலாக உருமாறி, மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் அருகே புதுச்சேரியில் கரையை கடக்க உள்ளது. இந்த புயல் தற்பொழுது 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், கடலூரில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கு- தென் […]
செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாலை 6 மணிக்கு மேல் 5000 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது. தற்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு நீர் திறப்பு மாலை 6 மணிக்கு 5000 கனஅடியாக அதிகப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் வரத்து அதிகரித்துள்ளதால் வெளியேற்றும் நீரின் விகிதமும் அதிகரிக்கிறது. மேலும், கரையோரம் வசிக்கும் மக்களை அந்தந்த நிவாரண முகாம்களுக்கு வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பூண்டி ஏரியின் மொத்த […]
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அடையாறு ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர். நிவர் புயலானது 11கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் , அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு அல்லது நாளை அதிகாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிவர் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் தொடர் கனமழை […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு மேலும் 500 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. தற்போது, 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது. தொடர் கனமழையால் நீர் அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை அறிவிப்பாக 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 22 அடியே நெருங்கியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போது திறக்கப்பட்ட நிலையில் ஐந்து ஆண்டுக்கு பிறகு மீண்டும் திறக்கட்டுள்ளது. ஏற்கனவே, செம்பரம்பாக்கம் அணையில் இருந்து வினாடிக்கு 1000 […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கபட்ட நிலையில் முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து கொண்டு வருகிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில், செம்பரப்பாக்கம் ஏரியில், 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, ஏரியில் உள்ள 7 மதகுகளில் முதற்கட்டமாக வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பையடுத்து கொட்டும் மழையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டு […]
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் சென்னையின் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் ,இதனால் புதுச்சேரி கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.மேலும் இந்த நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் […]
கனமழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில், சென்னையில் உள்ள செம்பரப்பாக்கம் ஏரியானது வேகமாக நிரம்பி வருகிறது .எனவே சென்னை மாநகராட்சி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று 12 மணியளவில் 1000 கன அடி அளவிற்கு உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதாகவும் ,மேலும் நீர்வரத்திற்கு ஏற்ப படிப்படியாக உயர்த்தப்படும் என்றும் […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. தற்போது, 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது. தொடர் கனமழையால் நீர் அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை அறிவிப்பாக 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 22 அடியே நெருங்கியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக 1000 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது, பின் சூழ்நிலையை பொறுத்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போது […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்க பட உள்ள நிலையில் நேரில் ஆய்வு செய்ய உள்ளார் முதல்வர் பழனிசாமி. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில், சென்னையில், செம்பரப்பாக்கம் ஏரியில், 1000 கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால், இருபுறமும் உள்ள தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சற்று நேரத்தில் செம்பரம்பாக்கம் திறக்கப்பட இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார். […]
செம்பரம்பாக்கம் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இன்று காலை முதல் நாளை காலை 6 மணி வரை 20 செ.மீ மழை பெய்யும் என்று மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி வாய்க்கால் செல்லும் கிராமத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில், சென்னையில், செம்பரப்பாக்கம் ஏரியில், 1000 கனஅடி நீர் திறக்கப்படவுள்ளதாகவும், நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என்றும் […]