தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடரும் மழை பெய்து வருகிறது. அதன்படி அதிகாலை முதலே கிண்டி, அடையாறு, வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 36 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று, 497 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு […]
வங்கக்கடலில் உருவான ‘நிவர்’ புயல் புதுச்சேரி அருகே அதிதீவிர புயலில் இருந்து தீவிர புயலாக வலுவிழந்து கரையைக் கடந்த நிலையில், பல பகுதிகளில் மழை குறைந்தது. இதனால், ஏரிக்கு நீர் வரத்து குறைந்ததால் ஏரியில் இருந்து 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விநாடிக்கு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 13.3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு இருந்து 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 21.85 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவை 24 அடி என்பது குறிப்பிடத்தக்கது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில் நீர்மட்டம் 22.3 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கன அடியிலிருந்து மீண்டும் 9000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரபாக்கம் நீர் ஏரிக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியிலிருந்து 8,840 கன அடியாக குறைந்துள்ளது. இதற்கு முன் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 9 ஆயிரம் கனஅடியில் இருந்து பின்னர், 7 ஆயிரம் கனஅடியாக […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது. செம்பரபாக்கம் நீர்திறப்பு முதலில் 1000 கனஅடியாக ஆயிரம் இருந்த நிலையில், பின்னர் 1500 கன அடியாகவும் திறக்கப்பட்டடது. தற்போது, 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், செம்பரபாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ள காரணத்தால் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு அதிகரிப்பால் அடையாறு ஆற்றில் […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. தற்போது, 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது. தொடர் கனமழையால் நீர் அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை அறிவிப்பாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பலத்த மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 கனஅடியை கடந்தது. ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாக கொண்டுள்ளது, ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3248 கனஅடியாக வருகிறது. இதற்கிடையில், செம்பரம்பாக்கம் […]