சென்னை, காஞ்சிபுரம் உள்பட கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள 10 மாவடங்களில் இன்று காலை முதல் யாருக்கேனும் இருமல், சளி, மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில் இதுவரை 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரசால் […]