இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் திரைபடத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது அதனை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அதன் முதற்கட்டமாக இன்று காலை 10 மணிக்கு அந்த படத்தின் ட்ரைலர் வெளியிடபடுகிறது. தமிழில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும், தெலுங்கில் ‘நாவாப்’ எனும் பெயரில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரை நகார்ஜுனாவும் வெளியிடுகிறார்கள். இதனை படக்குழு உறுதிசெய்துள்ளது. DINASUVADU