தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரே நாளில் சாரிசாரியாக 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய முகாம் நடத்தி பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தினார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்குமாறும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.