வாஷிங்டன் : அமெரிக்க வெள்ளை மாளிகையின் ‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப்’ என்ற தலைமைச் செயலர் பொறுப்பில் தனது தேர்தல் பிரசாரக் குழு மேலாளரான சூசி வைல்ஸ்ஸை நியமிக்க போவதாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதிபரின் முதல் நிலை உதவியாளராகச் செயல்படும் அந்த முக்கிய பதிவியில் ஒரு பெண் நியமிக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை செயலராக அதாவது முதல் பெண் […]