தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சி உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது. ஆளும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் ? முன்னிறுத்தப்படுவார்கள் என்ற விவாதங்கள் கடந்த சில வாரங்களாகவே சூடுபிடித்து வந்தது. இவ்விவகாரத்திற்கு இடையே அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே வெளிப்படையாக கருத்து மோதல் வெடித்தாக தகவல் வெளியானது.அக்கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. செயற்குழு […]
முதல்வர் இல்லத்திற்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் இல்லத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் இல்லத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.