மிரட்டும் கஜாவால் திருச்சி மற்றும் சென்னை இடையே விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி வரும் கஜாவால் 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி மற்றும் சென்னை இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.கஜாவின் கோராத்தாண்டவ சூறைக்காற்றால் வீடுகள்,மரங்கள் சேதமடைந்துள்ள நிலையில் போக்குவரத்துகளும் நேற்று நிறுத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது திருச்சி மற்றும் சென்னை இடையேயான விமான சேவைகள் பாதிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. DINASUVADU
சென்னையில் விடிய விடிய மழை பெய்துள்ளது.மேலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது.சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளான கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, மடிப்பாக்கம், மதுரவாயல், நங்கநல்லூரில் மழை பெய்துள்ளது. இந்நிலையில் சைதாப்பேட்டை, அசோக்நகர், நுங்கம்பாக்கம், சென்ட்ரல், திருவல்லிக்கேணி, வண்டலூர், தாம்பரம், பம்மல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. மழை குறித்து வானிலை மையம் மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு […]
சென்னை மந்தைவெளியில் சீருடையில் இருந்த ஆயுதப்படை காவலரிடம் செல்போனை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆயுதப்படை காவலரான மணிமாறன், கடந்த 2-ஆம் தேதி அதிகாலை சீருடையுடன் வீட்டிலிருந்து பணிக்கு புறப்பட்டபோது, பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரது செல்போனை பறித்துச் சென்றனர். அவர் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அபிராமபுரம் போலீசார், சந்தேகத்துக்குரிய 3 பேர் மந்தைவெளி, அபிராமபுரம், மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் அடுத்தடுத்த நாள்களில் செல்போன் […]
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திருவண்ணாமலை சி.நம்பியேந்தல் கிராமத்தை சேர்ந்த 10 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் பிரிவு 105ஆம் பிரிவை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் […]
பெண் காவல் எ.ஸ்பி ஐ.ஜி மீது கொடுத்த பாலியல் புகாரை ஏற்ற விசாக கமிட்டியின் முதல் புகார் இது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஐ.ஜி மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்கும் விசாகா குழுவின் முதல் கூட்டம் சென்னையில் தொடங்கியது. சென்னை பட்டினப்பாக்கத்தில் மாநில குற்ற ஆவணக் காப்பகத்தில் விசாக கமிட்டியின் கூட்டம் நடைபெறுகிறது.விசாகா கமிட்டியில் உள்ள டிஜிபி சீமா அகர்வால், கூட்டுதல் டிஜிபி அருணாச்சலம் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். காவல்துறையில் பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, கூடுதல் […]
துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், பணிமனைகள் என போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் மட்டும் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை மற்றும் பெரம்பூர் பகுதிகளில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டை பனகல் […]
சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய போர்க் கப்பல்களை பார்வையிட இன்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவிடந்தை ராணுவ கண்காட்சியை ஒட்டி, சென்னை துறைமுகத்தில் சுமித்ரா, ஷயாத்ரி, கமோர்டா, ஐராவத், குக்ரி ஆகிய 5 போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிட இன்றே கடைசி நாளாகும். எனவே கப்பல்களை பார்வையிட பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வருகின்றனர். தீவுத்திடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆதார் அட்டையை […]