சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.இதை தொடர்ந்து சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகெல் புதிய முதல்வராக கடந்த 17ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் புதிய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார்.இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவையில் ஒரு பெண் உட்பட 9 பேருக்கு சட்டீஸ்கர் மாநில பொறுப்பு ஆளுநர் ஆனந்திபென் படேல் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து […]
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என அம்மாநில முதல்வராக பதவியேற்க உள்ள பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் நாளேட்டுக்கு பேட்டியளித்த பூபேஷ் பாகல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒட்டு மொத்த விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்றுத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கூறியிருந்தார் என்று தெரிவித்த அவர் அதன்படி விவசாயிகளின் வேளாண் கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்வது தான் எங்களது முதல் முன்னுரிமையாக இருக்கும் என்று பூபேஸ் பாகல் தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் தேர்தல் […]
ஜார்கண்ட் – சத்தீஸ்கரில் எல்லைக்கு அருகே 6 வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவத்தில் தொடர்புடைய நக்சலைட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட்-சத்தீஸ்கர் எல்லைக்கு அருகே பால்கம்பூரில் உள்ள பாக்சைட் சுரங்கத்தில் ரயில் பாதை கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்ட 6 வாகனங்களை நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பாக நக்லைட்டு ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மீது […]