சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை ‘சன்னி லியோன்’ பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம் பெற்றது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் ‘டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு’ நிதி உதவித்திட்டம் நடைமுறையில் உள்ளது. இதைப் போல, சத்தீஸ்கர் மாநில அரசு அம்மாநில கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு உதவி தொகையாக ‘மஹ்தாரி வந்தனா யோஜனா’ (Mahtari Vandana Yojana) என்கிற திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் தான், அந்த நபர் […]
5 மாநில தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் கடந்த டிசம்பர் 3ஆம் தேதியே வெளியாகிவிட்டது. அதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு மாநில முதல்வராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று லால்டுஹோமா முதலமைச்சராக பொறுப்பேற்று விட்டார். சத்தீஸ்கரில் புதிய முதல்வராக விஷ்ணுதியோ சாய் தேர்வு…! அதன் […]
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 5 மாநில தேர்தலில் ஒரே ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநில முதல்வர் யார் என உடனடியாக அறிவித்து நேற்று ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில முதல்வராக பொறுப்பேற்று விட்டார். ஆனால் , 3 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக இன்னும் […]
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3 ஞாயிற்று கிழமை அன்று வெளியானது. அதில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் , சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் பாஜக ஆட்சி புரிந்து வந்த மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் முதன் முதலாக காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. மிசோரமில், ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சியை (MNF) பின்னுக்குத் தள்ளி, கடந்த முறை எதிர்கட்சியாக […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்தாரி மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று வயதான மூதாட்டியை (61 வயது) தாக்கியுள்ளது. இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி, இந்த மூதாட்டி சிங்பூர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள பலுச்சுவா கிராமத்தில் வசிப்பவர். நேற்று இரவு இந்த மூதாட்டி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கோபத்தோடு வனப்பகுதி நோக்கி சென்றுள்ளார். அங்கு காட்டு யானை தாக்கியதில் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் வாட்டி வதைக்கும் இந்த தொற்று கிருமி, இந்தியாவிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவின் ஒரு கிராமத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை என்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் கோசகுமுடா பகுதியில் உள்ள பலேங்கா கிராமத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. இந்த கிராமம் சத்தீஸ்கர் பகுதிக்கு அருகில் உள்ளது. இங்கு […]