சென்னை: தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் விசாரணை குழுவை அமைத்து, மாணவர்களிடையே நிலவும் சாதி மத பேதங்களை களைய உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரியிருந்தது. அதன்படி, சில மாதங்கள் ஆய்வு செய்து 650 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒருநபர் விசாரணை குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். நெற்றியில் திலகமிட கூடாது என, கையில் கயிறு கட்ட கூடாது உள்ளிட்ட நெறிமுறைகளை அந்த அறிக்கையில் இருந்ததாக கூறப்பட்டது. […]
சென்னை: மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது, நெற்றியில் திலகமிட கூடாது என்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்க கூடாது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி , இன ரீதியிலான வேறுபாடுகளை களைய, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் விசாரணை குழுவை தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நியமித்தது. நீதியரசர் சந்துரு தலைமையிலான ஒருநபர் விசாரணைக் […]
சென்னை : தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே ஏற்படும் சாதி வன்முறைகளை தடுப்பதற்கு, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு, ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் ஒரு இடைநிலை சாதியைச் சேர்ந்த மாணவர்களால் பட்டியலிடப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு பள்ளிக் குழந்தைகள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், சகோதரத்துவம் காப்பதற்கான வழிமுறைகளை வகுத்திடவும் தமிழ்நாடு அரசால், ஓய்வு பெற்ற நீதிபதி […]
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு கோடிக்கணக்கில் வரியை பெற்று வருகிறது. தங்க முட்டையிடும் வாத்தை யார் தான் அறுப்பார்கள். – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த தமிழக சட்டப்பேரவை மசோதாவுக்கு இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாமல் இருக்கிறார். அதற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறுகையில், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு கோடிக்கணக்கில் வரியை பெற்று வருகிறது. […]