சமீபத்தில் தெலங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிஆர்எஸ் கட்சி தோல்வியடைந்தது. இதைதொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி சந்திரசேகர் ராவ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தனது பண்ணை வீட்டில் இருந்து கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் சந்தித்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சந்திரசேகர் ராவ் தனது பண்ணை வீட்டில் இரவு 11.30 மணியளவில் குளியலறையில் கால் தவறி விழுந்து காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அருகில் இருந்த யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டார். அவருக்கு ஸ்கேன் செய்து […]
கமாரெட்டி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட ரமண ரெட்டி 66,652 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய முதல்வர் கே சந்திரசேகர ராவ் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை பாஜக வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி தோற்கடித்தார். கமாரெட்டியில் பாஜக வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி 66,652 வாக்குகள் பெற்று அதே தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய முதல்வர் கே சந்திரசேகர ராவை விட 6,741 […]
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு மாநிலங்களில் இரண்டில் பாஜக முன்னிலையிலும், இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளது. அதன்படி 199 இடங்களைக் கொண்ட ராஜஸ்தானில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி பாரதிய ஜனதா 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் ஆளும் கட்சியான காங்கிரஸ் 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 230 இடங்களைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில் பாஜக – 57 இடங்களில் முன்னிலையிலும் […]
சமீபத்தில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முடிவுகள் இன்றும், மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களின் முடிவுகள் ஒரே நாளில் இன்று வெளியிடப்பட இருந்த நிலையில், பின்னர் தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றி, மிசோரம் தேர்தல் முடிவுகளை டிசம்பர் 4ம் தேதி (நாளை) அறிவிக்க முடிவு செய்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் […]
நடந்து முடிந்த மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்பில் ராஜஸ்தானில் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என்றும் அதேசமயம் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் மத்திய […]
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இன்று தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்புகள் வரத்தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் […]
தெலுங்கானா:தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாக தெலங்கானா முதல்வர் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம்,போய்குடாவில் பழைய பொருட்கள் உள்ள குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். 8 தீயணைப்பு வண்டிகள்: குடோனில் இருந்த 12 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு எட்டு வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.மேலும்,தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். […]
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு உடல்நலப் பரிசோதனைக்காக வந்தார். அங்கு முதல்வர் சந்திரசேகர் ராவ்விற்கு மருத்துவர்கள் இதயம் தொடர்பான ஆஞ்சியோகிராம் பரிசோதனைகளை மேற்கொண்டனர் என தெலுங்கானா முதல்வர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் என்பதால் கவலைப்பட தேவையில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொது மற்றும் நல்லாட்சிக்கான பாதுகாப்பு சங்கம் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தெலுங்கானா அரசு 2014 ஜூன் முதல் 2018 அக்டோபர் வரை விளம்பரத்திற்காக சுமார் ரூ .300 கோடி செலவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த தொகையில் சுவரொட்டிகள், தொலைக்காட்சி சேனல்கள் , வானொலி போன்றவை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசு மொத்த செலவினங்களை இரண்டு தலைகளாகப் பிரித்துள்ளது. அதில், வெளிப்புற ஊடக நிறுவனங்களுக்கு செலவழித்த பணம் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் செலவழித்த […]
தெலங்கானாவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தெலங்கானாவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி எனவும், படப்பிடிப்புகள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்க அனுமதி என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், பொதுத்தேர்வு நடத்த முடியாது என்று அதனால், 10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு […]
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 5000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனாவை தடுக்கும் நோக்கில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்குஇடையில் தான் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று செய்திகள் அதிகம் வலம் வந்தது. இந்நிலையில் தான் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை […]