இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) நேற்று ரகுராம் ஐயரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒரு வருடமாக தலைமை நிர்வாக அதிகாரி( CEO) பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமனக் குழுவால் நடத்தப்பட்ட தேர்வு செயல்முறைக்குப் பிறகு ரகுராம் ஐயர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐஓஏ தெரிவித்துள்ளது. கவனமாக பரிசீலித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுடன் நேர்காணலுக்குப் பிறகு, நியமனக் குழு ஒருமனதாக ரகுராம் ஐயரை […]
முறைகேடாக கடன் வழங்கிய வழக்கில் கைதான சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சர் ஆகிய இருவரும் 3 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் பதவியில் இருந்த போது 2009-2011 காலகட்டத்தில் வீடியோகான் குழுமத்துக்கு விதிமீறி ரூ.3,250 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவும், இதன் மூலம் அவரும், அவரது கணவர் தீபக் கோச்சர் […]
பள்ளி மாணவர்களின் உடற்தகுதி, விளையாட்டு ஆர்வம், பங்குபெறும் போட்டிகள், வெற்றி – தோல்வி கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் இனி செயலியில் பதிவு செய்ய உத்தரவு. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகை பதிவை செயலியில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது, பள்ளி மாணவர்களின் உடற்தகுதி, விளையாட்டு ஆர்வம், பங்குபெறும் போட்டிகள், வெற்றி – தோல்வி கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் இனி செயலியில் பதிவு செய்து அதை தொடர்ச்சியாக […]
இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்பொழுதும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவல்லா, ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 4 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது தங்கள் கையிருப்பில் 20 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது விற்பனை இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,விற்பனையை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. வாகனங்களுக்கான பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால்,பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர்.இதனால்,இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு http://olaelectric.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் நடைபெற்றது.அதன்படி,ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் முன்தொகையாக ரூ. 499 […]
அமேசான் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஆண்டி ஜாஸே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜெப் பெஸோஸ் ஜூலை 5 ஆம் தேதி பதவி விலகியதை தொடர்ந்து இந்த பதவிக்கு அந்நிறுவனத்தின் இணையவழி சேவைகளுக்கு பொறுப்பாளராக இருந்த ஆண்டி ஜாஸே நியமிக்கப்பட்டுள்ளார். ஜெப் பெஸோஸ் 1994 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தை தொடங்கி அதனை முன்னணி ஆன்லைன் வர்த்தகமாக மாற்றி 27 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் ப்ளூ ஒரிஜினல் […]
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான்டின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் பொது கொள்கை சிந்தனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமிதாப் கான்ட் இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.இதனையடுத்து,இந்த பதவிக்காலம் 2019 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து மீண்டும் நடப்பு ஆண்டு ஜூன் 30 வரை பதவிக்காலம் இரண்டு ஆண்டு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,30.06.2021 முதல் 30.06.2022 […]
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜெஃப் பெசோஸ் அவர்கள் தற்போது தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். உலகின் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வந்தவர் தான் ஜெஃப் பெசோஸ். 1994 ஆம் ஆண்டு பெசோஸால் நிறுவப்பட்டது தான் அமேசான் நிறுவனம். 27 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த அமேசான் நிறுவனம் இவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்து 13 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை கொடுத்துள்ள […]
21 முறை மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சுட்டிக்காட்டிய தமிழக இளைஞருக்கு சிஇஓ நன்றி தெரிவித்தார். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெள்ள 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கலந்துகொண்டு பேசினார். அப்போது மைக்ரோசாப்ட் இயங்கு தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய இளைஞர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அதாவது கடந்த 2018ம் ஆண்டு மைக்ரோசாப்ட் இயங்கு தளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்தவர்களுக்கு பரிசு […]
உலக பணக்காரர்களுள் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவருமான பில் கேட்ஸ் தனது வாழ்க்கையின் கதாநாயகராக இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவரை குறிப்பிட்டுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தான் கதாநாயகர்களாகக் கருதும் ஐந்துபேரில் மருத்துவர் மேத்யூ வர்க்கீசும் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ளார். மற்ற மருத்துவர்களைப் போல் ஸ்டெதஸ்கோப் வைத்திருக்காமல் கையில் சிறு சுத்தியலும் கைகால்களின் நீளத்தை அளப்பதற்கான நாடா அளவியும் வைத்துள்ள மேத்யூ வர்க்கீஸ் பார்ப்பதற்கு ஒரு மரத்தச்சர் போல் இருப்பதாக பில் […]