கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தால் 108 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலரான சாலுமாரதா திம்மக்காவிற்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. கர்நாடகாவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான “சாலுமாரதா” என்று அழைக்கப்படும் திம்மக்காவிற்கு கர்நாடகா மத்திய பல்கலைக்கழகம் (சி.யு.கே) முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. சாலுமாரதா என்றால் மரங்களின் வரிசை என்று பொருளாம். மரங்களின் தாய் என்று அழைக்கப்படும் 108 வயதான திம்மக்கா இதுவரை கிட்டத்தட்ட 400 ஆலமரங்களை தனது கணவரின் சொந்த ஊரான துமகுரு மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஹுலிகலுக்கும் குடூருக்கும் இடையில் வளர்ந்துள்ளார். […]