தமிழ்நாட்டிற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டுமென்று தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நவீன் குமார் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.இதில் தமிழக அதிகாரிகள், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி தமிழ்நாட்டிற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.